Saturday, 28 April 2018

பொழப்பு கிடக்குது

எத்தனையோ பொழப்பு,
என்னை சுத்தியிருக்க...!

எதையும் தேடவிடாம,
கெளரவம் தடுக்க...!

படிப்புக்கேத்த வேலைவாங்க,
மனசு துடிக்க...!

வேலை கிடைக்காம...
வாங்குன பட்டம்,
காத்துல பறக்க...!

செலவழிச்ச காசு,
கடனை வளர்க்க...!

ஊருக்குள்ள நானும்,
தலைகுனிஞ்சி நடக்க...!

புத்தியிலே ஏதோ,
கொஞ்சம் உறைக்க...!

சொந்த முயற்சியில 
சுயதொழில் தொடங்க...

உழைப்பைக் கொடுத்து
தொழிலைப் பெருக்க - இப்போ

ஜெயிச்சி நானும்,
நிமிந்து நிக்கேன்...!

படிப்புக்கேத்த வேலைக்காக
தொலைக்க வேணாம்
நம்ம எதிர்காலத்த.....

- written by JERRY

Thursday, 26 April 2018

போக்கிடம்

கண்ணு மங்கிப்போச்சு...
காது அடச்சிப்போச்சி...
வயசும் கூடிப்போச்சு...
உறவும் விலகிப்போச்சு...
வயிறு மட்டும் வாடுது – ஒருவாயி
சோத்துக்கு ஏங்குது..!

பெத்தமவன் வீதியில...
விட்டுட்டுப் போனதுல..
திசைதெரியாம – என்
காலு தள்ளாடுது...
பாரமா நினைக்காம..
ஓரமா இடம் தரக்கூட
விரும்பாத மவன...
விரும்பிப் பெத்தேன் – இப்போ
வீதியிலே நிக்கேன்...!

போக்கிடம் தெரியாம...
தவிக்கிற இந்தப்பாவிய,
மனசுமாறி கூட்டிப்போக...
வந்துருடா மவனே – இந்த
மடச்சி கண்ணு மூடுறதுக்குள்ள...!!!

- written by JERRY

Wednesday, 25 April 2018

பயன்பாடு

பயன்படமாட்டோம் என்று...
பயன்படுத்தாமலேயே நம்மை...
பயனற்றவர்களாக எண்ணும்...
பயனற்ற எண்ணங்களை - தவிர்த்து

பயண்படுத்திப் பார்த்து...!
பயன்படுவோமா என்றறியும்,
பயணாவது கிடைக்கட்டும்...!!
நம்முடைய பயன்பாட்டில்...!!!

- written by JERRY

கடைக்கண் பார்வை

என்னவளே...
என் காத்திருப்பின்,
தவங்கள் எல்லாம்...
வரங்கள் ஆகின்றது...!

எவரும் அறியாமல் - உன்
கடைக்கண் பார்வை
என்னைத் தீண்டும் போது...!!

- written by JERRY

Tuesday, 24 April 2018

மாற்றம் வேண்டும்

மாற்றம் மட்டுமே,
மாறிமாறி வருகையில்...!

மாற்றுச் சிந்தனையில்,
மாற்றத்தை மாற்றுவோம்...!!

ஏமாற்றத்திலும் மாற்றம் தேடும்,
மாற்றம் நம்மிலும் பிறக்கட்டும்...
நேர்மறை மாற்றமாக...!!!

- written by JERRY

அரை நொடி போதும்

வேலைப் பளுவில்...

உடலை உருக்கி,
குடும்பம் பேணும்...
மனைவியின் வேலையில்,
பங்குகொள்ள வேண்டாம்...!

ஆண் என்ற மகுடம்...!
அப்படியே இருக்கட்டும்...!!

பேச்சின் இனிமையோடு...
அன்பாய் சாய்ந்துகொள்ள,
அரைநொடியேனும் ஒதுக்குங்கள்...

பைத்தியக்காரி அதைத்தாண்டி,
எதையும் விரும்புவதில்லை...!!!

- written by JERRY

Sunday, 15 April 2018

வருடியதால் வாடினேன்

நான்...
வாடிவிடவில்லை...!

அவள்...
கூந்தலை...
மெல்ல வருடியதால்...!!

களைத்துவிட்டேன்...!!!

- written by JERRY

Friday, 13 April 2018

மழை

மழையே...
நீயும் வந்து,
நனைந்துவிட்டுப் போ...!
என்னவளின் காதல் மழையில்...!!

- written by JERRY

மறுஜென்மம்

வறுமையே...
மறுஜென்மம்,
வேண்டுகிறேன்...!

ஒரு முறையாவது – உன்னை
ஜெயித்து...!!
பள்ளியின் வாசலை,
தொட்டுவிடலாம் – என்ற
ஏக்கத்தில்...!!!

- written by JERRY

சிறைவாசம்

அவள்...
சேலை மடிப்பில்,
சிக்கிய உள்ளம்...
ஏங்கித் தவிக்கிறது...!

இந்த சிறைவாசம்...
இனி தொடராதா என்று...!!

- written by JERRY

உண்மையான வெறுப்பு

பொய்யான அன்போடு...
நல்லவர்களாக போடும்,
முகத்திரையை விட...!

உண்மையான வெறுப்பை...
வெளிக்காட்டும் முகமே,
சிறந்தது – இந்த
போலியான உலகில்...!!

- written by JERRY

காதலின் துடிப்பு

இதயத்துடிப்பு...
இரட்டித்தது – அவள்
இமையசைவில்,
இணைந்த...
காதலின் துடிப்பால்...!

- written by JERRY

வருடியதால்

நான்...
வாடிவிடவில்லை...!

அவள்...
கூந்தலை...
மெல்ல வருடியதால்...!!

களைத்துவிட்டேன்...!!!

- written by JERRY

Thursday, 12 April 2018

நேசம்

அவளை...
உறவென்று நினைத்தேன்...!

உயிரென்று உணர்த்தியது – என்
உணர்விலிணைந்த...
அவளின் நேசம்....!!   

- written by JERRY

பருவங்களின் வளைவுகளில் (பெண்மை)


அன்பை இதயத்தில்,
சுமக்கும் காதாலாகிறது...!

காதலை கட்டிலில்
சுமக்கும் காமமாகிறது...!

கருவை வயிற்றில்
சுமக்கும் தாய்மையாகிறது...!

துன்பங்களை தனக்குள்ளே...
சுமந்து... சுமந்து...

இன்பத்தை உறவுகளுக்குள்...
பகிர்ந்து... பகிர்ந்து...

இறப்புவரை தன்நலன்,
மறந்து...!

குடும்பநலன் காண...
ஒளிதரும்  மெழுகாகவே,
கரைந்து விடுகின்றது...!!

- written by JERRY

கண்மூடித்தனம்

கண்மூடித்தனமான,
நம்பிக்கையில்...
காணாமல் போனவர்கள்,
ஏராளம்...!

சற்றே விழித்து,
தொடர்ந்திடுவோம்....!!
வாழ்க்கை பயணத்தை...!!!

- written by JERRY

பூட்டு

உள்ளத்தில் பூட்டிய,
உறவுகளை...

உணர்வுகளே இல்லாத,
முகநூல் பக்கங்களால்...

திறக்கத் துடிக்கும்...
நாகரீகக் கோமாளிகளாய்,
வாழத்தவிக்கிறோம்...!

- written by JERRY

எட்டிப்பிடிப்பேன்

எட்டிப் பிடிக்கும் தூரம்தான்...!
எட்டத் துணிந்தேன்...!!
எட்டியெட்டி பார்த்தேன்...
எட்ட ,முடியவில்லை...!!!

முயற்சியை தொடர்கிறேன்...!
என்றாவது எட்டிவிடுவேன்....
என்ற நம்பிக்கையில்...!!

- written by JERRY

முயற்சி

முயற்சி செய்...
முடியும்வரை அல்ல...!

எண்ணியதை - நீ
எட்டும்வரை...!!

விட்டுவிடாதே...
முயற்சியோடு
தொட்டுவிடு...!!!

- written by JERRY

இன்றைய உலகில்

வயிற்றுப் பசிக்கு,
திருடுபவன் குற்றவாளி...!

வயிற்றுப் பசியையே
திருடுபவன் திறமைசாலி...!!

- written by JERRY

பதில் தெரியாத கேள்விகள்

கேட்கப்படும் - பல
நியாயங்கள்...

பதில் தெரியாத,
கேள்விகளாகவே...!
நிராகரிக்கப்படுகின்றன...!!

- written by JERRY

ஆறுதல்

என் வலிகள்...
என்றும் விரும்புகிறது – உன்
தோள் சாய்ந்து,
ஆறுதல் தேட...!!

- written by JERRY

சிட்டுக்குருவி

அழிவின் விளிம்பில்,
இன்றோ நாங்கள்...!

சோகத்தில் எட்டிப்பார்த்தேன்...!!
இறுதி வரிசையில் - மனிதன்

விதி வலியதென்று...
இதயம் கணத்தது...!

இப்படிக்கு
“சிட்டுக்குருவி”

- written by JERRY

ஒரு நொடி

உன்...
தோள் சாய்ந்தால்..!

உயிர் பிரியும்,
துன்பம் கூட...

ஒரு நொடி..
இளைப்பாறிவிட்டு தான்,
செல்லும்...!!

- written by JERRY

Wednesday, 11 April 2018

உன் வெற்றியில்

நீ...! உன்...!
சரிகளையும்... தவறுகளையும்...

உணரத் தொடங்கிவிட்டால்...!!

உன் வெற்றியில்,
உலகம் உன்னை...
உணரத்தொடங்கும்...!!!

- written by JERRY

காதல்

இதயங்களின்,
இணைவில்...!

உணர்வுகளின்,
இடமாற்றம்...!!

- written by JERRY

முத்தம்

என்னவளே எந்தன்,
கோபத்தை...
சட்டென்று,
தணித்து விடுகிறாய்...!

உன்...
ஒற்றை முத்தத்தால்...!!

- written by JERRY

சுயமரியாதை

சுயமரியாதையை...
நமக்கு நாமே,
தந்துவிட்டால்...?

மரியாதை தானாக,
தயாராகிவிடும்...!

நம்மை அடைய...!!

- written By JERRY

ஏமாற்றாதே..! ஏமாறாதே..!!

தினம்... தினம்...
முட்டாள்களால்...
முட்டாளாக்கப்பட்டு...!

முட்டாளாக வாழும்,
நாம் தான்...
முட்டாள் என்பதை...
முட்டாள்தனமாக மறந்து,
முட்டாள்கள் தினத்தில்...
பிறருக்கு பகிர்கிறோம்...!

முட்டாள் தின வாழ்த்து...!!

- Written By JERRY

பெண்

உயிர் ஈன்று
உறவை தாங்கி
குடும்பம் பேணி...!

தாயாக..., சேயாக...,
தாரமாக..., தோழியாக...,
உடன்பிறப்பாக...!!

பூமிக்கு வரமானவள்...!
“பெண்”

- written by JERRY

மௌனங்கள்

அவளின் நாணத்தில், 

பூத்த மௌனங்கள்...

சத்தமிட்டு உரைக்கின்றது...! 

என்னிடம்...!!


சட்டென்று கரங்களை, 

பற்றிக் கொள்ள – ஏனடா 

தாமதிக்கிறாய் நீ என்று...!!!


- written by JERRY

நிராகரிப்பு

நம்மை உறவாக...
ஏற்க விரும்பாதவர்களிடம்,
காட்டப்படும் உரிமை...

தொல்லைகளாகவே,
நிராகரிக்கப்படுகிறது...!

- written by JERRY

தெருக்கோடி

கோடிகளில் புரள...
ஆசை இல்லை...!!

தெருக்கோடியைக் – கூட
பறித்துக் கொண்டால்...
எப்படி வாழ்வோம்...?

எங்களின் வாழ்வை...!!

-written by JERRY

உலகாளும் காதலா

என் இதயக்கதவை,
தட்டி எழுப்பி...

என்னுள் நுழைந்த
போர்படையே நீ தான்...!

உலகாளும் காதலா...!!

- written by JERRY

நாணம்


கரம் பிடிக்கும்,
நொடியெல்லாம்...
இதயம் இதமாய்த் துடிக்கிறது...!

நாணம் வந்து...
தழுவிக் கொள்வதால்...!!

- written by JERRY