Thursday, 26 April 2018

போக்கிடம்

கண்ணு மங்கிப்போச்சு...
காது அடச்சிப்போச்சி...
வயசும் கூடிப்போச்சு...
உறவும் விலகிப்போச்சு...
வயிறு மட்டும் வாடுது – ஒருவாயி
சோத்துக்கு ஏங்குது..!

பெத்தமவன் வீதியில...
விட்டுட்டுப் போனதுல..
திசைதெரியாம – என்
காலு தள்ளாடுது...
பாரமா நினைக்காம..
ஓரமா இடம் தரக்கூட
விரும்பாத மவன...
விரும்பிப் பெத்தேன் – இப்போ
வீதியிலே நிக்கேன்...!

போக்கிடம் தெரியாம...
தவிக்கிற இந்தப்பாவிய,
மனசுமாறி கூட்டிப்போக...
வந்துருடா மவனே – இந்த
மடச்சி கண்ணு மூடுறதுக்குள்ள...!!!

- written by JERRY

No comments:

Post a Comment