Wednesday, 31 January 2018

மீண்டும் மீண்டு வந்தாய்

நிலவே...
சூரியன் வஞ்சித்து,
ஒளி தராமல் உன்னை...
மாய்க்க நினைத்தான்...!

மாய்ந்து விடாமல்,
மீண்டு வந்தாய்...
இரண்டு மணிநேர,
போராட்டத்தின் பின்-உனக்காக
காத்திருக்கும் ரசிகர்களைத்தேடி...!!

Written by JERRY

Friday, 26 January 2018

வாடகைக்கு

நான் நானாக இருந்தேன்...
அனைத்தும் அதுவாகவே,
நிலைத்து உயிர்த்திருந்தது...!

ஆசைகளை மனதிற்கு,
வாடகைக்கு விட்டேன்...
என் நிம்மதி கூட ,
உயிரக்கு போராடுகின்றது ...!!

Written by JERRY

Monday, 22 January 2018

வெயில்

வெயிலை நான்
மிகவும் ரசிக்கிறேன் . . !

நீ நடக்கும் போது . . .
உன் நிழலாவது - என்மீது
உரசிச் செல்லும் என்பதால் . . ! !

Written by JERRY

Sunday, 21 January 2018

பிரிந்த ஜோடி

என்னை
விட்டுச் செல்லாதே - என்று
காலோடு சேர்ந்து வந்தாலும் . . !

ஜோடியில் ஒன்று நழுவியதால் ,
மற்றொன்றையும் தெரிந்தே . . .
நழுவ விட்டு வந்தேன் . . ! !

வெறுங்காலில் வருத்தத்தோடு . . ! ! !

Written by JERRY

பிரிந்த ஜோடி

என்னை
விட்டுச் செல்லாதே - என்று
காலோடு சேர்ந்து வந்தாலும் . . !

ஜோடியில் ஒன்று நழுவியதால் ,
மற்றொன்றையும் தெரிந்தே . . .
நழுவ விட்டு வந்தேன் . . ! !

வெறுங்காலில் வருத்தத்தோடு . . ! ! !

Written by JERRY

Saturday, 20 January 2018

புரிந்து கொள்வோம்

நம்மை நாமே ,

புரிந்து கொள்வதில்லை . . !

ஏனோ தெரியவில்லை . . .

மற்றவர்களின் தவறான

புரிதலுக்காக மட்டும் ,

கலங்கி விடுகின்றோம் . . ! !

புரிதல் நம்மில்

தொடங்கட்டும் முதலில் - பின்

மற்றவர்களின் புரிதலின்

தவறை சரியாக ,

புரியச் செய்வோம் . . ! ! !

Written by JERRY

Friday, 19 January 2018

தேடி அலைகின்றேன்

என்னை நான்
தேடுகிறேன்...!

எங்கு வாழ்கிறேன்....
எதற்கு வாழ்கிறேன்...
எப்படி வாழ்கிறேன்...
ஏன் வாழ்கிறேன்...

என்று
எத்தனை கேள்விகள்,
எழுந்து நின்றாலும்...!

இன்னும் தேடி அலைகின்றேன்...!!

பதிலுக்காக மட்டுமல்ல...
இன்னும் என்னைப்பற்றிய,
அதிகமான கேள்விகளுக்காக...!!

Written by JERRY

Wednesday, 10 January 2018

இரத்த தானம்

என் இரத்தத்தை தானம் செய்ய

எண்ணியதை எப்படி

தெரிந்து கொண்டதோ

தெரியவில்லையே எனக்கு . . !

இரவெல்லாம் வரிசையமைத்து

இரத்தத்தை இனாமாகக்

கொண்டு சென்றதே-இந்த

கொள்ளைக்கார கொசுக்கள் . . ! !

Written by JERRY

Tuesday, 9 January 2018

சிந்திப்போம் ஒரு கணம்

பேருந்தில்  சன்னலோரம்
எட்டிப்பார்கும் ஒரு தலை...
கீழ் நிற்பவர்களை காண மறுக்கும் கண்...

உமிழ்ந்த நீரை உள் விழுங்காமல்,
நடந்து செல்லும் சாலையை
அசுத்தம் செய்யும் புண்ணியர்களே...!

சிந்திப்போம் ஒரு கணம்...!!

வீட்டை சுத்தமாக வைக்க,
அகற்றிய குப்பைகளை...
குப்பைத்தொட்டிக்கு கொடுக்காமல்,
சுத்தமாய் இருக்கும் நிலத்தை
அசுத்தம் செய்யும் புண்ணியர்களே...!

சிந்திப்போம் ஒரு கணம்...!!

பொதுக்கழிப்பறைகளை தண்ணீர் இருந்தும்...
சுத்தம் செய்பவர்களுக்கு வேலை கொடுக்க,
அவர்களை மனிதர்களென்று,
மனதளவும் என்னாமல்,
அசுத்தம் செய்யும் புண்ணியர்களே...!

சிந்திப்போம் ஒரு கணம்...!!

நாகரீகம் என்ற பெயரில்,
மஞ்சப்பைகளை மறக்கச்செய்து...
நெகிழிகளின் வரவிற்கு கம்பளம்,
விரிக்கும் நாகரீக கோமாளிகளாய்
நிலத்தை நஞ்சாக்கி -  நாளும்
அசுத்தம் செய்யும் புண்ணியர்களே...!

சிந்திப்போம் ஒரு கணம்...!!

ஒருவேளை நம் மனம் இன்று...
அழுக்காகி போனதால் என்னவோ...?

அசுத்தம் செய்வதை சுத்தமாக செய்கிறோம்...!

துப்புரவு தொழில் செய்பவர்களுக்கும்,
நம்போன்ற உயிருள்ள ஆத்மாதான்...!

மனதாளும் செயலாலும் அவர்களை...
துன்புறுத்தும் நம் புத்திக்கு - ஏனோ
இன்றுவரை எட்டவில்லை...!

சுத்தம் என்பது நம் ஒவ்வொருவரின்
தனி முயற்சியின் இணைப்பில் பிறப்பது...!!

Written by JERRY

Monday, 8 January 2018

அழுகை மொழி

அன்னையே - எந்தன்
முதல் அழுகையை
உனக்காவே, சமர்ப்பிக்கிறேன்...!

பத்துமாதம் பெரும் சுமையாய்,
உன்னுள் தோன்றி...!

வலியை மட்டும் கொடுத்து,
வாழ்ந்து வந்ததால் - என்னை

பிரசவிக்கும் நேரத்தில்,
தோன்றும் வேதனை உணர்ந்து...
உனக்கு ஆறுதல் சொல்கிறேன்....!!

எந்தன் முதல் அழுகை மொழியால்...!!

Written by JERRY

Saturday, 6 January 2018

பழைய சோறு

அன்னையே ...
அருகில் நீயிருந்து,
அமிழ்தமே கொடுத்தாலும்...
ருசித்த நாக்கு - அதை
ரசிக்க மறுத்தது...!

குறைகள் சொல்வதிலே,
கவனமாய் நின்றது...!

வேலை கிடைத்ததும் - சற்று
விலகிய தூரம் சென்று ,
விடுதியில் சேர்ந்தேன்...

பணம் கொடுத்ததும்,
பசிக்கு உணவு கிடைத்தது...

எங்கு சென்றும்
எள்ளளவும், ருசிவரவில்லையே...!

வாடிய உள்ளம்,
தேடி அலைகிறது...!

பழைய சோறு என்றாலும்...
பத்துமாதம் சுமந்தவளே -  உன்
கைப்பக்குவம் போதுமென்று,

குறை சொல்லிய வாய்க்கு,
நிறைவில்லாத உணவவே
வாய்பூட்டாக மாறியதே...!

ஏக்கமறிந்து அன்னையே - நீ
கட்டி அனுப்பிய பலகாரங்கள்...
மரணித்துவிட்ட என் நாக்கிற்கு - இன்று
மீண்டும் உயர் கொடுத்ததம்மா....!!

Written by JERRY

Friday, 5 January 2018

யோசனை

எதையாவது

யோசிக்க வேண்டுமென்று ,

யோசனை செய்கிறேன் . . !

யோசனை தொடர்ந்தாலும் . . .

யோசிக்க வேண்டியது ,

யோசனையில் வரவில்லையே - என்ற

யோசனையிலேயே - என்

யோசனையை யோசிக்காமல்

விட்டுவிட்டேன் . . ! !

Written by JERRY

Thursday, 4 January 2018

வலியின் வலி

நண்பா . . .

வலியின் வலிகளை . . .

வலிகளால் உணர்ந்ததால் - உந்தன்

வலியும் புரிகின்றது . . !

வழியில்லை என்றே ,

வாழ்க்கையை முடக்கிவிடாமல் . . .

வழிகள் நம் வாழ்விலும் ,

வாழ்ந்திட  முயன்றிடலாமே . . ! !

Written by JERRY

Wednesday, 3 January 2018

அடக்க வேண்டியவை

பைகளுக்குள் அடக்க வேண்டியதை...
வேண்டாத நேரத்தில் - உன்
கைகளுக்குள் அடக்கி....!

கண்... காது... வாய்...
இம்மூன்றிற்கும் பாலங்கலாக அமைத்து....!!

கவனம் சிதறிப் போகையில் ...
சாலையில் உன்னை சிதைத்துவிட ,
எதிர் நோக்கியிருக்கும் எமனுக்கு ...

உயிரைத் தாரைவார்க்க ,
உன்னை மறந்து செல்லலாமோ...!?!?

Written by JERRY