பேருந்தில் சன்னலோரம்
எட்டிப்பார்கும் ஒரு தலை...
கீழ் நிற்பவர்களை காண மறுக்கும் கண்...
உமிழ்ந்த நீரை உள் விழுங்காமல்,
நடந்து செல்லும் சாலையை
அசுத்தம் செய்யும் புண்ணியர்களே...!
சிந்திப்போம் ஒரு கணம்...!!
வீட்டை சுத்தமாக வைக்க,
அகற்றிய குப்பைகளை...
குப்பைத்தொட்டிக்கு கொடுக்காமல்,
சுத்தமாய் இருக்கும் நிலத்தை
அசுத்தம் செய்யும் புண்ணியர்களே...!
சிந்திப்போம் ஒரு கணம்...!!
பொதுக்கழிப்பறைகளை தண்ணீர் இருந்தும்...
சுத்தம் செய்பவர்களுக்கு வேலை கொடுக்க,
அவர்களை மனிதர்களென்று,
மனதளவும் என்னாமல்,
அசுத்தம் செய்யும் புண்ணியர்களே...!
சிந்திப்போம் ஒரு கணம்...!!
நாகரீகம் என்ற பெயரில்,
மஞ்சப்பைகளை மறக்கச்செய்து...
நெகிழிகளின் வரவிற்கு கம்பளம்,
விரிக்கும் நாகரீக கோமாளிகளாய்
நிலத்தை நஞ்சாக்கி - நாளும்
அசுத்தம் செய்யும் புண்ணியர்களே...!
சிந்திப்போம் ஒரு கணம்...!!
ஒருவேளை நம் மனம் இன்று...
அழுக்காகி போனதால் என்னவோ...?
அசுத்தம் செய்வதை சுத்தமாக செய்கிறோம்...!
துப்புரவு தொழில் செய்பவர்களுக்கும்,
நம்போன்ற உயிருள்ள ஆத்மாதான்...!
மனதாளும் செயலாலும் அவர்களை...
துன்புறுத்தும் நம் புத்திக்கு - ஏனோ
இன்றுவரை எட்டவில்லை...!
சுத்தம் என்பது நம் ஒவ்வொருவரின்
தனி முயற்சியின் இணைப்பில் பிறப்பது...!!
Written by JERRY
No comments:
Post a Comment