Tuesday, 26 December 2017

சுனாமி

திரண்டு வந்து ,
புரட்டி போட்டாய் . . !

உறவுகளை உயிரோடு ,
இழுத்துச் சென்றாய் . . ! !

ஆண்டுகள் கடந்தாலும் ,
ஆழ்மனதின் வேதனையை . . .

அஞ்சலி செலுத்தி ,
ஆற்ற முயன்றாலும் . . .

சுனாமியே உன் சுவடுகள் . . .

வடுக்களாக மனதை அழுத்துகின்றதே . . ! ! !

Written by JERRY

Monday, 25 December 2017

பரிசுத்த ஆத்மா

பாவங்களை மனதோடு கொண்டு...

நியாயாதிபதியாக போலி, அலங்காரத்தோடே...

ஆலையத்தில் புண்ணியவானாக...
அனைவரையும் ஏமாற்றுவதாய்....
கடவுளின் முன் நம்மை ஏமாற்றாமல்...

பாவங்கள் கழுவப்பட்ட ஆத்துமாவாக...
பரிசுத்த அலங்காரத்தோடே...
ஆர்பரிக்க செல்லுவோம்...!

கிறிஸ்த்துவின் பிறந்த நாளை
உண்மை கிறிஸ்தவனாக.......

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

பாவங்களை பரிகரிக்க,
பூமியை சுதந்தரிக்க,

தேவனின் ஈவு...

மரியாளுக்கு மகனாக,
மனுச குமாரனாக,
மண்ணை அலங்கரித்த...

மகத்துவமான - இந்நாளில்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்....!!

Written by JERRY

Saturday, 23 December 2017

கற்பு

எவரும் இல்லாத தருணத்திற்காக,
எட்டிப் பார்க்கிறேன்...!

விளையாட வேண்டுமென்று
ஆசை...!

ஏனோ தெரியவில்லை,
வீடு தாண்ட பயம்...!!

எதிர் வீட்டு மாமா,
பக்கத்து வீட்டு அண்ணன் - என
யாரையும் நம்ப மறுக்கிறது - மனம்

குழந்தைகள் என்பதை மறந்து,
தேக வதை செய்யும் - இந்த
கயவர்களை எண்ணி... எண்ணி...!!!

Monday, 18 December 2017

பெண்மை

பருவங்களின் வளைவுகளில்
(பெண்மை)

அன்பை இதயத்தில்,
சுமக்கும் காதலாகிறது...!

காதலை கட்டிலில்,
சுமக்கும் காமமாகிறது...!

கருவை வயிற்றில்,
சுமக்கும் தாய்மையாகிறது...!

துன்பங்களை தனக்குள்ளே,
சுமந்து... சுமந்து...

இன்பத்தை உறவுகளுக்குள்,
பகிர்ந்து... பகிர்ந்து...

இறப்புவரை தன்னலம்,
மறந்து...

குடும்பம் நலன் காண,
ஒளிதரும் மெழுகாகவே...

கரைந்து விடுகின்றது...!

Written by JERRY

மண்வாசனை

கரிப் பாத்திரங்களுக்கும் ,

விறகுப் புகைக்கும் - நடுவே

கருமேகத்தில் ஊடுறுவும் . . .

நிலவாக கறைபடிந்தாலும் . . !

கிராமத்து மண்வாசனையோடு . . .

பாவாடை தாவணியில் ,

அழகாகவே தெரிகின்றது . . ! !

என்னவளின் பெண்மை . . ! ! !

Written by JERRY

Wednesday, 13 December 2017

அழகு

அழகு என்ற

வார்த்தை கூட ,

கூடுதல் அழகாகிறது - அந்த

அழகை உன் ,

முகத்தில் பார்க்கும் போது . . ! ! !

Written by JERRY

Tuesday, 12 December 2017

மழலை மொழி

உந்தன் இதழ் பேசும்
மழலை மொழியில்...

மயங்கி தினமும்...
கேட்டுக் கொண்டே,
இருக்க வேண்டும் - என்று

போராடுகிறது - எந்தன்
உள்ளம் என்னோடு ...!!!

Written by JERRY

Monday, 11 December 2017

பிச்சைக்காரி

கந்தல் உடையில்,
காவிய நாயகி...!

கூந்தல் சடையில்,
குடியேறிய அழுக்கு...!

வறுமையின் பிடியில்,
வளம் இழந்த மேனி...!

வெம்மையின் கொடுமையில்,
வெடிப்புற்ற பாதங்கள்...!

பசியின் கோரத்தில்,
திருவோடான கைகள்...!

விடியலின் தேடலில்,
பாவையவள் கண்கள்...!

இரவின் விடியலுக்கு அல்ல – அவள்
வாழ்வின் விடியலுக்கு...!!!

Written by JERRY

Saturday, 9 December 2017

அரசாங்கமே

வயிற்றை நிரப்ப,
குடும்பம் காக்க,
தொழில் செய்ய நாங்கள்...
கடல் நோக்கி சென்றோம்...!

புயலொன்று உருவாகி,
புரட்டிப்போடும் என்ற தகவல் கூட,
செவிகளை சேரமுடியாத...
தூரம் சென்றுவிட்டோம்...!

தாக்கிய புயல்...
தூக்கி எறிந்ததில் – நாங்கள்
நடுக்கடலில் நடுக்கத்தோடு,
நாதியின்றி தவித்தோம்...!

உதவிக்கரம் நீட்டி...
உரியவர்களிடம் எங்களை சேர்த்திட,
படையொன்று திரண்டு வருமென்று...
உயிரைக் கையில் பிடித்துத் தத்தளித்தோம்...!

எட்டு நாட்கள் நகர்ந்தும்,
எட்டிப்பார்க்காத அரசாங்கம்...
எங்களை உயிரென்று,
எண்ண மறந்துவிட்டது...!

பலமழிந்து உடல் சோர்ந்து,
வாழ்வை வெறுத்து - எங்களின்
உயிர் துறந்தோம்...!

பிணம் கண்டாவது,
மனம் இரங்கி – என்
உடன் வந்து உயிரோடு – இன்னும்
கடலில் தத்தளிக்கும் எம்மக்களை,
காப்பாற்றும் எண்ணம் வராதோ – என்றெண்ணி
பிணமாய் கரை ஒதுங்கினோம்...!

நஷ்ட ஈடு கொடுத்து – எங்களை
அடக்கம் செய்து – எங்கள்
உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல்...!

இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்...!
எஞ்சிய உயிர்களாவது மிஞ்சட்டும்...!!

Written by JERRY

Friday, 8 December 2017

நைட் லேம்ப்

தன்னை அலங்கரித்து...!
மனதை வசீகரித்து...!

வெட்கத்தில் சிவந்து-என்
இரவை...............

ஒவ்வொருநாளும்,
தன்னோடு இணைத்து - மனதை
கவர்ந்துவிடுகின்றது...!

இந்த மெல்லிய,
இரவு விளக்குகள்...!!

written by JERRY

Wednesday, 6 December 2017

கால அட்டவணை

காலம் . . .

கற்று கொடுக்கும்  பாடத்திற்கு ,

தேர்வு எழுத தயாரானதை ,

எல்லாருக்கும் தெரிய வைக்கின்றது . . .

மரணம் என்னும் ,

கால அட்டவணையில்...!

Written by JERRY