Thursday, 12 July 2018

தூரிகை

***************

இமையொன்று இமைத்த நொடி தொட்டே
காதல் சிறகில் சிறகடிக்கிறது உள்ளம்.....!

வாழ்வின் வசந்தமொன்று வந்ததென்று  நானும்
வசந்த கானம் பாடியே திரிகின்றேன்....!

மனதை வருடிய உந்தன் மூச்சுக்காற்று
புயலாய் மனதை அமைதியிழக்கச் செய்கிறது..!.

உந்தன நிழல் கூட தூரிகையாக...
எந்தன் மனதில் வண்ணம் தீட்டுகிறது...!

உன்னைப் பற்றிய கனவுகள் எல்லாம்
எனைத் தீண்டித்தீண்டி தினம் தடுமாற்றுகிறது....!

உன் நினைவுகள் தொலைவுகளின் இடைவெளியை
நில்லாமல் செய்து கொல்லாமல் கொல்கிறது....!

நீ செல்லும் பாதையெங்கும்  படிந்திருக்கும்
மணலாய் படிந்திருக்கிறது என் ஏக்கங்கள்....!

உறவாக உயிராக உனைச் சேரவே
உன் பின்னால் ஓடியே திரிகின்றது...!

ஏழையென்று எனை எண்ணி விலகிடாதே
அன்பைப்பொழியும் வள்ளல் நான்  மறவாதே...!

சம்மதம் என்ற ஒற்றை வார்த்தைக்கு
தவம் கிடந்து தவிக்கிறேன் நானடி…!

மௌனம் கலைத்து இணைக்க வாராயோ
உன் மனதை என் மனதோடு...!

பூங்கொடியே புதுமலரே சித்திரமே சொல்லடி
உன்னைச் சேரவே நான் வந்தேனென்று....!

- written by JERRY



Monday, 9 July 2018

விழித்தெழு.....

**************
காலம் வருமென்ற
காத்திருப்புகள் காலாவதியாகி.....

உறங்கிக் கொண்டிருக்கும்
உன்னை உலுக்கக் காத்திருக்கும்
உலகத்தின் முன்....!!!

உடமைகளையாவது காப்பாற்றிட,
உன்னை நீயே தட்டி
 எழுப்பி விடு நண்பா....!!

இன்று விழுந்த நீ
விதை என்பதை மறவாதே....!!

உணர்ந்து நீ விழித்தெழு
விருட்சம்  தரும் மரமாக.....!!

written by JERRY 


சின்ன சின்ன ஆசை...

**************************

மடிந்துவரும் இயற்கையன்னையை  மீட்டெடுத்து
மடிதன்னில் வாழ்ந்திட ஆசை.....!

சுதந்திரமான குழந்தைப்பருவத்தை எந்தன்,
தலைமுறைகளும் அனுபவிக்க ஆசை....!

முதியோரில்லம் தவிர்த்து முதியோர்களின்,
பொழுதைப்போக்கும் திண்ணைகள் பெருகிட ஆசை....!

தொலைந்து வரும் பழமைகளை...
புதுமையின் ஆட்சியில் மாய்ந்திடாமல்,
கட்டிக்காக்க ஆசைகள் ஏராளம்....!

ஆயுளைக் கெடுக்கும் ஆடம்பரத்தைவிட...
ஆரோக்கியம் கொடுக்கும் ஏழ்மையில்,
நிறைவோடு வாழ ஆசையோ ஆசை....!

written by JERRY 



Sunday, 8 July 2018

வாய்மை அதுவே உண்மை......



1.வாய்மையை புறம்தள்ளும்
பொய்மையின் முன்னேற்றம்....

வெயில்நேரக்  காணல்நீராகக்
காணமல் கரைந்திடுமே...!!!


2. பொய்மையின் பொய்யான ஆட்சியில்/
வாய்மை வாய்மையாக
ஏழ்மையில்  வாழ்கின்றது-வாய்மையே
வெல்லுமென்ற நிச்சயத்தில்......!!!

written by JERRY


விழி நீர் செலுத்த வந்துவிடு....

**************************
எனக்கானவள் நீயென்று
எனதுள்ளம் அறிந்து
உனக்காக வாழ்வதற்கு
ஏங்கியே தவிக்கிறது....!

குனிந்த தலையொன்று
நிமிரும் தருணம் நோக்கி
எதிர்பார்க்கும் என் மனத்தோட்டத்தில்,

சின்னதாய் ஒரு
காதல் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்காமல் நோகடிக்கிறதே...!!!!

ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவாயோ-என்று......

எனக்குள்ளே  புதைத்த காதலை
கடைசி ஆசையாக தூதுவிட்டேன்
எனது மரண ஓலையில்....!!

சொல்லாத காதல் என்னை
கொல்லாமல் கொல்கிறது....
நரகமாய் வதைக்கிறது...!!!

துணிவில்லாத  என்னுள் பிறந்த
காதலை கல்லறையில் மறைத்து

உன்னைச் சேரும்
வழியொன்று அறியாமல்

விழிமூடிய எனக்காக -உன்
விழிநீர் செலுத்த வாராயோ.....!!!

- written by JERRY
   

கண்ணீர்

கண்களில் கண்ணீர் இல்லை.....
இரத்தம் மட்டுமே..............

தண்ணீரை தாரை வார்த்தாய் ....
தாகத்தை அடக்க சொல்லி....

விவசாயிகளை தெருவில்
நிறுத்தினாய்......
மானத்தை துறக்க சொல்லி.....

சுவாசத்தை  கெடுத்தாய்....
கேன்சரை அனுபவிக்கச்சொல்லி.....

எதிர்த்து கேட்டோம்
அடித்து விரட்டினாய்.....

தாங்கிக் கொண்டு 
தொடர்ந்தோம் போராட்டத்தை......

பணத்தின் வெறியாட்டம்
மனிதத்தை  மறக்கடித்தது.....

ஜாதிகளும் மதங்களும்
பிரிவனை மறந்து
இணைந்தது தன்
இனத்தின் அழிவை தடுக்க....

இறுதியில் எல்லாம்
தோற்றுப் போனது......

சுயநலவாதிகளின் சுயநலத்தில்
சுவாசக்காற்றை  மீட்க
களம்கண்ட சொந்தங்கள்
காணதேசம் சென்றுவிட்டனரே.....

என்ன பாவம் செய்தனரோ
படுகொலை செய்ய
துணிந்தது ஏனோ........

உரிமையை கேட்டோம்
உயிரை பறித்தது ஏனோ.......
 பணத்தில் நிரப்ப முடியுமோ
குடும்பத்தின் இழப்பை.....

படு கொலைக்கு
பதில் வேண்டும்......

இழப்பு எங்களுக்கானது......
வலியை நிச்சயம்
உணர்த்துவோம்.......
உணர்த்தும் வரை ஓயாது........
எங்களின் துடிப்பு......

written by JERRY 


அவமானத்தின் உச்சகட்டம்

என் மக்களின்
எதிர்ப்பு எப்படியோ
எட்டியது அரசின்
செவிகளில்.....

போராட்டங்களின் அமைதியை
போர்க்களமாக மாற்றி
ஆளும் கட்சிகள்
ஆளாத கட்சிகள் எல்லாம்
ஆழமாக அரசியல்
ஆதாயம் தேடிக்கொண்டார்கள்.....

காவல்துறயை எதிரயாகவும்
அரசியல்வாதிகளை ஆறுதலாகவும்
அழகாக சித்தரித்து விட்டீர்கள்.....

பணமும் அரசுவேலயும்
ரத்தத்திற்கு விலையானது......

உயாரிழப்பை தடுக்க
உரிமைக்காக போராடினோம்....
வருமானம் வற்றிப்போகும்
வருத்த்தம் கூடிப்போனதில்.....

வொறித்தனமாக வேட்டையாடி
வீதியில் வீசிவிட்டு
விசாரணை ஆணையம் .......
யாரை விசாரிக்க நாடகமோ.......

உயிரை பறித்துக்கொண்டு
உணர்வுகளை அடக்கிக்கொள்ள
கேட்டுக்கொள்ளும் அசிங்கம்.....

மாட்டுக்காய் இணைந்தவர்கள்
மனிதத்தை மறந்தார்கள்... பாவம்
மனித்ரகள்தானே அவர்களும்....

எங்களுக்கான அரசென்று
நம்புகிறோம் நம்பிக்கையிலல்ல.....
மனதில் கலந்த கட்டாயத்தில்....

காசுக்காக காவு வாங்கி
சிதைத்துவிட்ட உயிர்கள்
உயிரகளாக தெரியவில்லையோ......

மனித உரிமை ஆணையம்
நீதிமன்றங்கள் எல்லாம்
வேடிக்கை பார்க்க மட்டும் தானோ......

வேடிக்கை பார்த்து
வருந்தபவர்களுக்கு ஒருநாள்
நாங்களும் வருத்தம்
தெரிவிக்கும் நாள் வரும்.....

திட்டங்கள் பல காத்திருக்கிறது
உங்கள் மண்ணையும் அழிக்க.....
அன்று எங்கள் உள்ளம்
வேடிக்கை பார்க்காது
நிச்சயம் இணைந்திருக்கும்  உங்களோடு..

உப்பிடும் எங்கள் உள்ளத்திற்கு
உதவும் உணர்வுகள் அதிகம்......

இனி இருப்பவர்களையாவது
வாழ விடுங்கள்.......

பரபரப்பான செய்திகளுக்காக
எங்களை சூரையாட வேண்டாம்......
எங்கள௨க்காக இரங்கியவர்களுக்கு
எங்களின் நன்றிகள்.........

எங்களுக்காய் உயிரிழந்தவர்களுக்கு
எதை ஈடுசெய்ய செய்ய....
கண்ணீரில் மறைகின்றது கண்கள்...

ஆலை மூடும் உத்தரவு
கண்துடப்பாக இருக்காது என்றே
நம்புகிறது ஏமாளி உள்ளம்.......

மறதியில் மறந்துவிட்டு
அடித்த நிகழ்வை ரசிக்க
வழக்கம்போல் தயாராகுவோம்........

அதுதானே மனித இன
அவமானத்தின் உச்சகட்டம்........
                         
- written by JERRY


இனி எல்லாம் சுகமே....

முதிர்ச்சியடைந்த முதுமை,
வீதியில் நாதியற்றிருக்க....!

பசியிலும் தாகத்திலும்,
 உடல் தளர்ந்திருக்க...!

ஆதரவுக்கரமொன்று ஆதாரவாய்,
 அரவணைத்து சொன்னது......!

இனி எல்லாம் சுகமே-கருணை இல்லத்தின்,
புதிய உறவுகளுக்கு மத்தியில்....!

- written by JERRY 


Saturday, 7 July 2018

ஜன்னலோரம்

பேருந்தில் சன்னலோரமாய்
வேடிக்கை பார்த்த  கண்கள்
கண்ட காட்சிகள் ஏராளம்.......!!!

சிந்திக்க வைத்த
ஒரு காட்சி சற்று
மனதை உலுக்கியது....!!!

இருபத்தைந்து வயது
 வாலிபர்கள் இருவர்...
ஒருவர் பேருந்தின் உள்ளே....
மற்றொருவர் பேருந்தின் வெளியே...!!!!

பேருந்தினுள்
பணக்கார தோற்ற வாலிபன்....
அருகில் காதலி...
கடற்கரைக்கு பயணச்சீட்டு......
கவலையெல்லாம் எப்படி
பொழுதைக் கழிப்போம் என்பதே.....!!!

பேருந்தின் வெளியே
 அழுக்கு உடை
அடுக்கிய மூட்டைகள்...
வண்டியழுத்தும் வாலிபன்....
கவலையெல்லாம் எப்படி
பொழுதை  காப்பது என்பதே.....!!!

ஐம்பதாயிரம் இருந்தால்
ஐபோன் வாங்க எண்ணம்.....
பணத்தில் வளர்பவனுக்கு....!!!

ஐந்தாயிரம் இருந்தால்
மாதத்தை சமாளிக்க எண்ணம்
வறுமையில் வாழ்பவனுக்கு....!!!

தலையெழுத்து என்று
ஏளனம் செய்பவர்கள்
ஏராளம் ஏராளம்...!!!!

பள்ளியில் நான்
படித்த பாடங்களில் கூட
சமச்சீர் பிறந்து விட்டது....!!!!

ஆனால் என்னவோ
வாழ்க்கைப் பாடம்
ஒவ்வொருவருக்கும்....
விதவிதமான பாடங்களை
ஏற்றத் தாழ்வுடனே
எப்பொழுதும் கற்பிக்கிறது.....!!!!

சமச்சீர் பாடத்தை
வாழ்க்கைப் பாடத்திலும்
கற்றுக் கொள்ளும் காலம் வருமா..??
அடுத்த தலைமுறக்காவது.......?

written by JERRY 

வகுப்பறை வாசல்

புதிய அனுபவம்
புதிய பிரிதல்
மழலையின் முதல்
கால்தடம் பள்ளியில்.....!!

வகுப்பறை வாசலில்
ஆசிரியரின் அழைப்பு
புதியதொரு மொழியாய்
உள்ளுக்குள் பயம்...!!!

அம்மாவின் கரங்களை
இருக்கமாக பிடித்த
பிஞ்சு கரங்கள்.....!!!!

அம்மா வாசல்லையே
உன்கூட உக்காந்திருப்பேன்
நீ அழாம படிச்சிட்டு வா
அம்மா இங்கயே இருக்கேன்-என்ற
சமாதானப் பேச்சு.....!!!

அழுது வடியும் கண்களோடு
வகுப்பறையில் மாணவனாய்
முதல் நாள் தொடக்கம்......!!!

பள்ளி வாசலை
கடந்து செல்லும் தருணம்....!!!

 மகனின் கண்ணீரில்
பாசத்தின் வெளிப பாடும்...!!

பிள்ளையின் இலக்கை
தொடங்கி வைத்த
ஆனந்தத்தின் வெளிப்பாடும்.... !!!

 வழிந்து ததும்பியது
ஆனந்த கண்ணீராய்....
அன்னையின் கண்களில்......!!!
                 
written by JERRY 



2018-2019 வசந்தத்தின் கல்வியாண்டு



வாழ்வின் சவால்கள்
வளர்ந்துகொண்டே வருகிறது...!!!

சமூகத்தில் சாதிக்க
சகலவித்தையும் தேவை....!!!

விதைத்த விதையின்
 வளர்ச்சிகள் வீணாகாமல்...,
ஆண்டுக்கொரு கிளையாய்
தளர்வின்றி தளிர்க்கின்றது.....!!!

இந்த ஆண்டின்
வசந்தமும் மலர்ந்துவிட்டது....!!!

எட்டிப்பார்க்கும் கனவுகள்
ஏணிகளைத் தேடுகின்றது....
தண்டிப்புகளால் அதைத்
தவிர்த்து விடாமல்....!!!

அன்பு கலந்த கண்டிப்பில்
அவர்களை ஏற்றிவிடுவோம்...!!

கற்றல் புதுமைகளை
கற்க ஓடட்டும்....
கற்பித்தல் புதுமைகளை
விருந்தாய் படைக்கட்டும்....

ஆசிரியர் பணியை
கடமையாக அல்லாமல்..

மாணவர்களின் வளர்ச்சியை,
இலக்கில் நிறுத்தும்
லட்சியத்தோடு பணிசெய்வோம்...!

தடைகளால் தேங்கவிடாமல்
தட்டிக் கொடுத்து ,
தூக்கி எழுப்பும்
தோழமைகளாய் உழைப்போம்....!!

ஆசிரயராய் ஐந்தாண்டுகள்
மாணவர்களோடு வாழ்ந்துவிட்டு....!!

மாணவரில்லா வெறுமையில்,
அலுவலகப்பணி சலிப்பை
சற்று  அதிகமாக்குகிறது...!

மனதும் ஏங்குகிறது
ஆசிரியராக மீண்டும் மாறிட....!!

ஆசிரியர் சமுதாயமே
விடுமுறையில் சிறகை
விரித்த சிட்டுக்களை
கூண்டு பறவைகளாக்காமல்...!!

மனதிற்கு மகிழ்ச்சியையும்...!
திறமைக்கு சவால்களையும்...!
அள்ளிக்கொடுத்து-அவர்களை
சாதனையாளர்களாக மாற்றும்...,!!!

இந்த கல்வியாண்டு
இனிதாய் பிறந்திட
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் அனைவருக்கும்
அன்பு வாழ்த்துகள்...!
                       
written by JERRY