Thursday, 12 July 2018

தூரிகை

***************

இமையொன்று இமைத்த நொடி தொட்டே
காதல் சிறகில் சிறகடிக்கிறது உள்ளம்.....!

வாழ்வின் வசந்தமொன்று வந்ததென்று  நானும்
வசந்த கானம் பாடியே திரிகின்றேன்....!

மனதை வருடிய உந்தன் மூச்சுக்காற்று
புயலாய் மனதை அமைதியிழக்கச் செய்கிறது..!.

உந்தன நிழல் கூட தூரிகையாக...
எந்தன் மனதில் வண்ணம் தீட்டுகிறது...!

உன்னைப் பற்றிய கனவுகள் எல்லாம்
எனைத் தீண்டித்தீண்டி தினம் தடுமாற்றுகிறது....!

உன் நினைவுகள் தொலைவுகளின் இடைவெளியை
நில்லாமல் செய்து கொல்லாமல் கொல்கிறது....!

நீ செல்லும் பாதையெங்கும்  படிந்திருக்கும்
மணலாய் படிந்திருக்கிறது என் ஏக்கங்கள்....!

உறவாக உயிராக உனைச் சேரவே
உன் பின்னால் ஓடியே திரிகின்றது...!

ஏழையென்று எனை எண்ணி விலகிடாதே
அன்பைப்பொழியும் வள்ளல் நான்  மறவாதே...!

சம்மதம் என்ற ஒற்றை வார்த்தைக்கு
தவம் கிடந்து தவிக்கிறேன் நானடி…!

மௌனம் கலைத்து இணைக்க வாராயோ
உன் மனதை என் மனதோடு...!

பூங்கொடியே புதுமலரே சித்திரமே சொல்லடி
உன்னைச் சேரவே நான் வந்தேனென்று....!

- written by JERRY



No comments:

Post a Comment