எனக்கு நானிருக்கிறேன் - என்று
எனக்கு நானே...
எடுத்து சொல்லும் - பக்குவத்தை
என்னிடம் தந்தது...
என் தனிமை...!
Written by JERRY
எனக்கு நானிருக்கிறேன் - என்று
எனக்கு நானே...
எடுத்து சொல்லும் - பக்குவத்தை
என்னிடம் தந்தது...
என் தனிமை...!
Written by JERRY
நம்பிக்கையில்..
பகிர்ந்த இரகசியங்களை...
பிறர் வாய்க்கு
விருந்தளிக்கும் துரோகிகள்...
உறவுகளாய் உடன்
நிற்பதை விட...
எதிரியாய் எதிரில்,
நிற்பதே சிறப்பு...!!
Written by JERRY
இரக்கத்தின் வாழ்வு . . .
கண்களில் தொடங்கி ,
இதயத்தை தொடும் ,
பயணதூரம் மட்டும் . . .
வாழ்ந்து மடிகின்றது
- இன்றைய ,
இயந்திர வாழ்வில் . . !
Written by JERRY
முடிவை எண்ணி தோல்வி பயத்தில் ...
தொடக்கத்தை முடிவாக்கும் ,
மடையர்களின் நிழல் கூட ...
பூமியில் வாழ தன்னை ,
தகுதி இழப்பு செய்ய வேண்டும் ...!
Written by JERRY
நமக்கு ஆறுதலாக...
யாருமில்லை - என்ற
சுயநல சிந்தனை...
நாம் யாருக்கு,
ஆறுதலாக இருக்கிறோம்...
என்பதை மட்டும்,
சிந்திக்க மறந்துவிடுகிறது..!
Written by JERRY
கண்களின் மொழி ,
மனதோடு பேசி . . .!
இமைக்கும் நொடியில் ,
இதயங்கள் இடமாறி . . ! !
விழிமூடும் நொடிவரை . . .
வழிந்தோடும் அன்போடு வாழ ,
நேசத்தால் இணைந்த ,
காதல் உள்ளங்களுக்கு . . .
" காதலர் தின வாழ்த்துக்கள் "
Written by JERRY
என்னை...
விமர்சனம் செய்பவர்களுக்கு,
ஒரு வேண்டுகோள்...!
தகுதியற்ற உங்களுக்கு,
தகுதியை தரவில்லை...!!
என் பயணம் ,
உங்கள் வார்த்தைக்கு அல்ல ..!
என் இலக்கிற்கு..!!
Written by JERRY
தன்நம்பிக்கையில் ,
நம்பிக்கையிழந்து . . .!
முடியாது என்று ,
முடங்கிவிடும் மனங்கள் . . .
எழுந்து நிற்பதற்கும் ,
தேடத்தான் வேண்டும் . . ! !
தனக்கான ஊன்றுகோலை . . ! ! !
Written by JERRY
என் வாழ்வின்...
நிறைவை அடைய,
என் மனம் ...
எனக்கு சொல்லித்தந்த,
ஒரு வரி மந்த்திரம்...
"நீ நீயாக இரு"
Written by JERRY
இன்று . . .
நான் முட்டாளாய் ,
இருப்பது வலிக்கவில்லை . . !
யாரை என் ,
அறிவாக நினைத்தேனோ . . .
அவர்களால் முட்ளாக்கப்பட்டதே ,
அதிகம் வலிக்கிறது . . ! !
Written by JERRY
என் வாழ்க்கை
இன்பமாய் இருக்கிறது . . !
நாகரீகக் கம்பளத்தில் அல்ல . . ! !
கிழிந்த கிராமத்துக் கோணியில் . . ! ! !
written by JERRY
சிறந்த கவிஞராக வேண்டும்,
ஏங்கித் தவித்தது உள்ளம்...!
உள்ளத்தின் கற்பனைகளுக்கு,
வரவேற்பு கொடுத்தது...
என் அருமை தோழர்களாம்
பேனாவும்... பேப்பரும்...
எந்தன் கற்பனைகளைக்
காகிதத்தில் கொட்டித் தீர்க்க...
தன் உயிரையும்,
கொடுத்தது பேனா...!
கற்பனைகளுக்கு உயிர் கொடுத்து...
கவிதை வரிகளாய் மாற்றி...
காகிதத்தையும் நிரப்பிவிட்டேன்...!!
என்னைப் பார்த்து சிரித்தது காகிதம்...!
கற்பனைகளுக்கு இடம் கொடுத்தேன் - ஏனென்றால்
நானோ ஏழைத் தோழன்...!
கவிதைகளைக் கொண்டு சேர்க்க,
என்னிலும் சிறந்த காகிதம் உண்டு...!!
எப்படி அதை சொந்தமாக்குவாய்...!
அதன் பெயர் தான் பணம் என்றது ...!
கற்பனைகளோடு சேர்த்து,
காகிதமும் உறங்கிக் கொண்டிருக்கிறது...!
என் வீட்டு அலமாரியில்,
இன்று வரை...!!
Written by JERRY