சிறந்த கவிஞராக வேண்டும்,
ஏங்கித் தவித்தது உள்ளம்...!
உள்ளத்தின் கற்பனைகளுக்கு,
வரவேற்பு கொடுத்தது...
என் அருமை தோழர்களாம்
பேனாவும்... பேப்பரும்...
எந்தன் கற்பனைகளைக்
காகிதத்தில் கொட்டித் தீர்க்க...
தன் உயிரையும்,
கொடுத்தது பேனா...!
கற்பனைகளுக்கு உயிர் கொடுத்து...
கவிதை வரிகளாய் மாற்றி...
காகிதத்தையும் நிரப்பிவிட்டேன்...!!
என்னைப் பார்த்து சிரித்தது காகிதம்...!
கற்பனைகளுக்கு இடம் கொடுத்தேன் - ஏனென்றால்
நானோ ஏழைத் தோழன்...!
கவிதைகளைக் கொண்டு சேர்க்க,
என்னிலும் சிறந்த காகிதம் உண்டு...!!
எப்படி அதை சொந்தமாக்குவாய்...!
அதன் பெயர் தான் பணம் என்றது ...!
கற்பனைகளோடு சேர்த்து,
காகிதமும் உறங்கிக் கொண்டிருக்கிறது...!
என் வீட்டு அலமாரியில்,
இன்று வரை...!!
Written by JERRY
No comments:
Post a Comment