விடுதியில்
தங்கியிருப்பதால்
தேவையின்
போது மட்டும்
ஏ.டி.எம்
ல் பணம் எடுப்பேன்...
நேற்றும்
வழக்கம் போலவே
பணம்
எடுக்க ஏ.டி.எம் சென்றேன்..
மொழியைத்
தெரிவு செய்ய
அறிவுறுத்தியது
எந்திரம்...
படித்திருக்கிற
ஆணவம்
தமிழைத்
தவிர்த்து ஆங்கிலத்தை
தெரிவு
செய்ய தூண்டியது...!
வங்கி
இருப்பிலிருந்து
2000 ரூபாய் எடுத்தேன்...
இயந்திரத்தின்
அடுத்த கேள்வி.
பணபரிவர்த்தணைக்கு
ரசீது
அவசியம்
இல்லை என்றால்
வேண்டாம்
என்ற பட்டணை
தெரிவு
செய்ய சொன்னது...!!
இதன்
மூலம் மரம் அழிவதை
நாம்
படிபடியாக தடுக்கலாம்-என்று
எனக்கு
அறிவுறுத்தியது... நானும்
சராசரி
மனித இனம் தானே...!!
இந்த
சிறு காகிதத்தை தவிர்த்தால் மட்டும்
மரத்தை
பாதுகாக்க முடியுமோ என்று
நகைத்துவிட்டு
ரசீது பெற்று வந்தேன்...!!
தன் தாய்
மொழியை தெரிவு செய்ய
கவுரவம்
பார்க்கும் மனமும்...
ஒருவர்
மாறுவதால் மட்டும்
அனைத்தும்
மாறிடாது என்ற
அற்ப
எண்ணம் உள்ளவரை...
எவ்வளவு
முயற்சித்தாலும் எந்த
முன்னேற்றமும்
வரப் போவதில்லை...!!!
written by JERRY

No comments:
Post a Comment