புதிய இடம்...
புதிய வேலை...
புதிய மக்கள்...
புதிய அலுவலகம்...
அதில்,
எனக்கென ஒரு
இருக்கை...!
அங்கு,
தூசுகளுக்கு நடுவே
உறங்கும் பைல்கள்...!!
அரசு அலுவலகம்
என்பதால்
மின்
விசிரிக்குக்கூட அலட்சியம்,
மெதுவாக
சுற்றியது...!
உடன்
பணிபுரிபவர்களில்
தலைமையை தவிர்த்து,
மற்றவர்கள் ஆண்களே...!
பெண் தோழமை
இல்லாததால்
புதிதாய் ஒரு முகம்,
மெதுவாய்
புன்னகையித்தது...!
எலும்புகளை மறைக்க
தசை...!
தசைகளை மூடிய சேலை...!!
என்ற தோற்றத்தில்
என்
எதிரே நின்று
கேட்டது...
“காபி வடை
வாங்கவா...?
நானும் சரி என்று
சொல்ல,
காலை... மாலை...
இருவேளை
காபி வடை இருபது
ரூபா...!
நாட்கள் நகர நகர - அந்த
பெண்மணியிடம் ஒரு
நட்பு...!
அலுவலகத்தின்
இருக்கைகளில்
ஏராளம்
வெற்றிடமே...!!
காபி
குடித்துவிட்டு டம்ளரை
வாங்க நிற்கும்
பெண்ணிடம்,
சற்று இங்கே
உட்காருங்கள் என்று
நாற்காலியை
கொடுத்தேன்...!!
அருகில்
அமர்ந்திருந்த
ஆண் அலுவலரின்
அகங்கார பார்வை என்
மேசைப்பக்கம்
திரும்பியது...
அமர்ந்திருந்த
அப்பெண்
சட்டென்று
வெளியேறினாள்
இருக்கையின்
மரியாதையை
கெடுக்க
வேண்டாமென்று...!!
முணுமுணுத்தது
அவரின் உதடுகள்...!
உள்ளம் வலித்தது...!!
இருக்கைக்கு
கிடைக்கும் மரியாதை கூட
அந்த பெண்ணிற்கு
இல்லையா..?
எது
தீர்மானிக்கிறது மரியாதையை
அலுவலரின்
இருக்காய் இல்லையே...?
அலுவலகத்தில்
உறங்கு இருக்கைதானே
எப்போதும்
முன்னேற்றம்
என்பது இல்லாமல்
போகிறது
மங்கிக் கிடக்கும்
மனதிற்கு...!
wrirren by JERRY

No comments:
Post a Comment