Wednesday, 13 June 2018

ஜன்னலோர பயணம்

**********************
ஜன்னலோர பயணம் 
**********************

பேருந்தில் சன்னலோரமாய்
வேடிக்கை பார்த்த  கண்கள்
கண்ட காட்சிகள் ஏராளம்.......!!!

சிந்திக்க வைத்த
ஒரு காட்சி சற்று
மனதை உலுக்கியது....!!!

இருபத்தைந்து வயது
 வாலிபர்கள் இருவர்...
ஒருவர் பேருந்தின் உள்ளே....
மற்றொருவர் பேருந்தின் வெளியே...!!!!

பேருந்தினுள்
பணக்கார தோற்ற வாலிபன்....
அருகில் காதலி...
கடற்கரைக்கு பயணச்சீட்டு......
கவலையெல்லாம் எப்படி
பொழுதைக் கழிப்போம் என்பதே.....!!!

பேருந்தின் வெளியே
 அழுக்கு உடை
அடுக்கிய மூட்டைகள்...
வண்டியழுத்தும் வாலிபன்....
கவலையெல்லாம் எப்படி
பொழுதை  காப்பது என்பதே.....!!!

ஐம்பதாயிரம் இருந்தால்
ஐபோன் வாங்க எண்ணம்.....
பணத்தில் வளர்பவனுக்கு....!!!

ஐந்தாயிரம் இருந்தால்
மாதத்தை சமாளிக்க எண்ணம்
வறுமையில் வாழ்பவனுக்கு....!!!

தலையெழுத்து என்று
ஏளனம் செய்பவர்கள்
ஏராளம் ஏராளம்...!!!!

பள்ளியில் நான்
படித்த பாடங்களில் கூட
சமச்சீர் பிறந்து விட்டது....!!!!

ஆனால் என்னவோ
வாழ்க்கைப் பாடம்
ஒவ்வொருவருக்கும்....
விதவிதமான பாடங்களை
ஏற்றத் தாழ்வுடனே
எப்பொழுதும் கற்பிக்கிறது.....!!!!

சமச்சீர் பாடத்தை
வாழ்க்கைப் பாடத்திலும்
கற்றுக் கொள்ளும் காலம் வருமா..??
அடுத்த தலைமுறக்காவது.......?

-Written by JERRY 




No comments:

Post a Comment