Tuesday, 5 June 2018

மனம் மட்டும் உண்டு

நல்லது செய்ய வேண்டும்...
நல்லது செய்ய வேண்டும்....
விரும்புகிறது உள்ளம்...!!!

பிச்சைக்காரனுக்கு பணம்கொடுக்க
சட்டென்று மனம் வரவில்லை....!
சில்லரையை உள்ளே மறைத்து
சில்லரையாக நடக்கிறது மனது.....!!

கீழே தவறி விழுந்தவனை
பட்டென்று தூக்க மனமில்லை...!
சிரித்து விழுந்தவரை
வேதனைப்படுத்துகிறது உள்ளம்...!!

பேருந்தில் அமர்ந்திருக்கையில்
எதிர்நிற்கும் மூதாட்டிக்கு..,
இடம்கொடுக்க மனமில்லை-எனக்கு
கால்வலிக்குமென்ற சுயநலம்....!!!

சாலைவிபத்தில் அடிபட்டவரைக்கண்டு
கண்கள் கலங்கினாலும் ...
நம்மால் என்ன முடியுமென்று.....
கூட்டத்தோடு வேடிக்கைபார்த்துவிட்டு...
விலகிச் செல்கிறது கால்கள்....!!!

எது நல்லது என்று
யோசிக்கத் தெரிந்தும்
யோசிக்க மனமில்லாமல்.....!
நல்லது செய்ய வேண்டுமென்ற
யோசனை மட்டும் மாறவில்லை.......!!!!
               
-written by JERRY

No comments:

Post a Comment